Ads (728x90)

வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் நாணய பரிமாற்றத்தையும் அமெரிக்கா தரம் உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. சீனாவுடனானது முட்டாள் வர்த்தகம் என டிரம்ப் கூற, இரு நாடுகளிடையேயான வர்த்தம் மேலும் விரிசல் கண்டது.இந்நிலையில் இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

தற்போது இந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் இணைத்துள்ளதாகவும், இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக செயலாக்கங்கள் மேம்படும் என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள நிலையில் இது சீனாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget