ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம், கவாஜா ஒமரி நகரில் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தினுள் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மாவட்ட ஆளுநர் மற்றும் 6 போலீஸார் இறந்ததாகவும் உளவுத் துறையை சேர்ந்த 10 பேர் காயம் அடைந்ததாகவும் கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அரிப் நூரி தெரிவித்தார்.ஆனால் இந்த தாக்குதலில் மாவட்ட ஆளுநர், போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் இறந்ததாக மாகாண காவல்துறை துணைத் தலைவர் ரமஸான் அலி மோசினி கூறினார்.
“கவாஜா ஒமரி மாவட்டம், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார் அவர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Post a Comment