Ads (728x90)

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். ஆசாத்துக்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டவுமா பகுதியில் கடந்த வாரம் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.

இந்நிலையில், சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தப் போவதாக சில மேற்கத்திய நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இந்தப் பிராந்தியத்தில் நிலைமை மோசமடையும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget