Ads (728x90)

இவ்வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 720 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் தொடர்பிலேயே பதியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்த்ரகுப்த தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகளின் நூற்றுக்கு 75வீதமானவை போலி கணக்குகள் தொடர்பிலானவை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்பொழுது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget