பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப வைபவம் அவுஸ்ரேலியா, குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் பிறிஸ்பேக்கில் அமைந்துள்ள கோல்கோஸ்ட் நகரில் உள்ள ஹரேறா விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதனை ஒரு அலங்கார வைபவமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக இங்கிலாந்தின் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி சார்ள்ஸ் இளவரசரும் அவரது பாரியாரான கமிலா பாகரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த வைபவம் அவுஸ்ரேலிய நேரப்படி இரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விளையாட்டு நிகழ்வு இடம்பெறவுள்ள இந்த பகுதியில் கடும்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டபோதும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அங்கு தற்பொழுது ஓரளவிற்கு மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொதுநலவாய ஒன்றியத்தின் விளையாட்டு மாநாட்டின் செயலாளர் திருமதி பிறடிக்கா ஸ்கொட்லாண்ட்க்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகரவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கோல்ட்கோஸ்ட் செறவுண்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
71 நாடுகளைச்சேர்ந்த 4500 க்கு மேற்பட்ட வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment