Ads (728x90)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று ஆரம்பமானது. கொழும்பு மாநகர எல்லலைப்பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் கொழும்பு மாநகர முதல்வர் திருமதி ரோசி சேனநாயக்க தலைமையிலும் , கொழும்பு மாநகர சபை சுகாதார திணைக்களம் ,சுகாதார அமைச்சு , ஜனாதிபதி செயலணி , சுற்றாடல் பொலிஸார், முப்படை மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தரர்களின் பங்களிப்புடன் ஆரம்பமானது.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை கருத்திற் கொண்டு நுளம்பு ஒழிப்பு திட்டங்களை அமுலாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget