மலையாள குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்திக்.. மோகன்லால் மம்முட்டி ஆகியோர் படங்களில் தவறாது இடம்பெறுபவர். கேரக்டருக்காக எந்தவிதமான கெட்டப்பும் போட தயங்காத இவர் தற்போது நடிகர் திலீப்புக்கு மகனாக நடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். காரணம் திலீப்பை விட இவர் ஐந்து வயது மூத்தவர்.ஆனால் தற்போது கம்மார சம்பவம் படத்தில் திலீப் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் தொண்ணூறு வயதான கிழவர் வேடமும் ஒன்று. இந்த வேடத்தில் நடிக்கும் திலீப்பிற்கு மகனாகத்தான் நடிக்கிறார் சித்திக். ரதீஸ் அம்பாட் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Post a Comment