Ads (728x90)

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய அரசாங்கத் தரப்புத் தகவல்களை ஆதாரம் காட்டின் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் 19ம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இருவரும் இங்கிலாந்து செல்கின்றனர்.இதன்போது அவர்கள் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவர்களுக்கு இடையிலும் சந்திப்பொன்று நடைபெற வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் எதிர்வரும் 19ஆம் திகதி சந்திப்பை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget