பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார். கௌரவமான முறையிலும் முன்மாதிரியாகவும் விவாதத்தை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பமானபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment