Ads (728x90)

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னேற்றகரமான ஆரம்ப சுகாதார சேவையை கட்டியெழுப்பியுள்ளதாக, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘பில் அன் மெலின்டா கேட்ஸ்’ நிதியத்தின் இணை ஸ்தாபகருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆரம்ப சுகாதார சேவை பணியாளர்களாக பெண்கள் பணியாற்றுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் கல்வி முறைமையை பாராட்டியுள்ள பில் கேட்ஸ், உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும், அந்த நாட்டைப்போன்று சிறப்பான கல்வி முறைமை இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget