நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் எட்டாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இரண்டாவது அமர்வுகள் மே மாதம் எட்டாம் திகதி தொடங்கும். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அடுத்த அமர்வை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
இந்த இடைவெளிக்குள் பாராளுமன்றத்தில் எதுவித பிரேரணைகளையோஇ வினாக்களையோ சமர்ப்பிக்க முடியாது. பாராளுமன்றத்தின் சகல செயற்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
கடைசியாக 2009ம் ஆண்டு மே 17ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
Post a Comment