Ads (728x90)

சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான அரச வங்கி விடுமுறை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, மே 01 ஆம் திகதிக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு மே மாதம் 7 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்றல் 26 ஆம் திகதி தொடக்கம் மே 2 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தொழிலாளர் தின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடாத்துவதால் சமய நிகழ்ச்சிகளுக்கு தடங்கல்கள் ஏற்படலாம். எனவே, மே தினக் கூட்டத்தை வேறு ஒரு தினத்தில் நடாத்துமாறு பிரதான நான்கு மகாநாயக்க தேரர்களும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச தொழிலாளர் தின விடுமுறையை மே மாதம் 7 ஆம்திகதி வழங்குவதென பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget