எமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் முன்னிற்போம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கட்சியாக இருந்து தனித் தீர்மானம் ஒன்றை எடுத்ததன் பின்னர் அதற்கு மாற்றமாக கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு கட்சியாக இருந்து கட்சியைப் பாதுகாப்பதற்கு தங்களுக்கு முதுகெலும்புள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்கு தனக்கு எந்தவித தேவையும் இல்லை. கடந்த காலத்திலும், தற்பொழுதும் தன்னை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அனுப்பிக் கொள்வதற்கு சிலருக்கு மிகவும் தேவையுள்ளதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment