Ads (728x90)

ஆப்ரிக்கா கண்டத்தில் பிளவு ஏற்பட்டு வருகிறது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து லண்டன் பல்கலைக்கழக  ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர், எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தன. இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது.  மாய் மஹூ நகரத்திற்கு அருகில்  இந்த பிளவு காணப்படுகிறது

இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget