இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த பிரதிநிதிகளின் குழு சுகாதாரம், வீடமைப்பு , சுற்றுலாத்துறை விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் ,எரிபொருள் அகழ்வுத் துறைகளிலும் மேற்கொள்ளக்ககூடிய முதலீடு தொடர்பிலும் இவர்கள் இதன்போது கவனம் செலுத்தினர்.
உலகில் அதிநவீன தொழில்நுட்பத்துடனான இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்ளக்கூடிய நவீன வைத்தியசாலை ஒன்றை நாட்டில் அமைப்பதற்கும் , சுற்றுலா பேட்டைகளையும் குறைந்த செலவைக்கொண்ட நவீன வீட்டுத்தொகுதி இரண்டினை அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவும் இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment