சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர் லீ சீன் லுாங் பங்கேற்றார்.சிங்கப்பூரின் 'லிட்டில்இந்தியா' பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது.
கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில் நான்காவது முறையாக சீரமைக்கும் பணி 2016ல் துவங்கியது. இப்பணியில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.
சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
Post a Comment