Ads (728x90)

வீட்டுப் பணியாளர்களுக்கும் எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தை வழங்குவதற்கு தேவையான சட்ட நகல் வரவை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான வீட்டுப்பணியாளர்களுக்கு இதுவரை காலம் இல்லாதிருந்த உரிமைகள் பலவற்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதற்கு இணங்க ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றை செலுத்த வேண்டி வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலநறுவை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வீட்டுப் பணியாளர்கள் விபத்துக்களில் சிக்கினால் இதுவரை காலம் அவர்களுக்கு தொழிலாளர் நட்ட ஈடு வழங்கப்படவில்லை. புதிய சட்டத்தின்படி இந்த உரிமையும் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு உரித்தான சகல தொழிலாளர் உரிமைகளையும் வீட்டுப் பணியாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget