Ads (728x90)

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் அமைந்துள்ள அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உலகின் அமைதி, பாதுகாப்புக்கு தீவிரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சில நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளன. தீவிரவாதம் மட்டுமன்றி அணு ஆயுத அச்சுறுத்தல், உள்நாட்டுப் போர், அகதிகள் பிரச்சினை, வறுமை ஆகியவையும் சர்வதேச அளவில் மிகப்பெரும் பிரச்சினைகளாக உள்ளன. இதற்கு தீர்வு காண அணிசேரா நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

புவி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget