வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், 35 ஆண்டுகளுக்கு பின், வரும், 18 முதல், தியேட்டர்கள் செயல்படத் துவங்கும்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.சவுதி அரேபியாவில், மதக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, 1980களின் துவக்கத்தில், சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது.அனுமதிதற்போது, சவுதியின் பட்டத்து இளவரசரான, முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு போட்டி களை நேரடியாக பார்க்க பெண்களுக்கு அனுமதி என, பல விஷயங்களை செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக, சவுதியில் சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி 'ஏப், 18 முதல், திரையரங்குகள் செயல்படத் துவங்கும்' என, சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இதில் முதல் காட்சி யாக, ஹாலிவுட் படமான, பிளாக் பாந்தர் திரையிடப்பட உள்ளது.வேலைவாய்ப்புஐந்து ஆண்டுகளில், சவுதியில் உள்ள, 15 நகரங்களில், 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என, தெரிகிறது. 'சினிமா மீதான தடை விலக்கப்படுவதால், பொழுதுபோக்கு துறை வளர்ச்சி காணும். பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும்' என, சவுதி அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment