கல்வி அமைச்சு ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டியை நான்கு கட்டங்களாக இம்முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
போட்டியின் நிறைவு விழா பதுளை வின்டன் டயஸ் மைதானத்தில் நடைபெறும். மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள்.
Post a Comment