Ads (728x90)

சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை டிஜிட்டல் முறையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

மே மாதம் முதல் புதிய முறை அமுலாக்கப்படவுள்ளது. பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் புதிய முறையை அறிமுகம் செய்ததாக திரு.சந்திரசிறி குறிப்பிட்டார்.

இந்த முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றலாம். முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget