தமிழ் சினிமாவில் நடந்து வரும் வேலை நிறுத்தம் காரணமாக தமிழுக்கு அறிமுமான நடிகர், நடிகைகள் நடித்த தெலுங்கு, மற்றும் மலையாளப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வருகிறது. நயன்தாரா நடித்த படம் ஒன்று வாசுகி என்ற பெயரில் தமிழில் வருகிறது. அனுஷ்கா நடித்த தெலுங்கு படம் ஒன்று வருகிறது. இந்த நிலையில் பூர்ணா நடித்த ராட்சஷி என்ற தெலுங்கு படமும் வருகிறது.கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம்தான் ராட்சஷி. இதில் பூர்ணாவுடன் அபினவ், கிஷோர், அபிமன்யூ சிங், பேசி தன்வி, பேபி கிருத்திகா, ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணா ராயல் இயக்கி இருந்தார். வினோத் யாஜமான்யா இசை அமைத்திருந்தார்.
இரண்டு குழந்தைக்கு தாயான பூர்ணா கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திடீரென அவர் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு தீய சக்தி அவரது இரண்டு குழந்தைகளையும் பலி கேட்டு துரத்துகிறது. அந்த தீயசக்தியிடமிருந்து பூர்ணா குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இந்தப் படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு குந்தி என்ற பெயரில் வெளிவருகிறது.
Post a Comment