வயது ஏற ஏற மம்முட்டிக்கு இளமை திரும்புகிறதோ என்பது போல அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு போட்டியாளராக வருடத்திற்கு ஆறு படங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல மாறிவரும் சினிமா சூழலுக்கு ஏற்ப நாளுக்கு நாள் தன்னை அப்டேட்டும் செய்து கொள்கிறார்.மேலும் ரசிகர்களுடன் தன்னை தொடர்பில் வைத்திருக்க பேஸ்புக் ட்விட்டர் என சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். தற்போது இன்னொரு சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.
Post a Comment