சிரம சக்தி என்ற மக்கள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்திக்கிராமத்திற்கான வேலைத்திட்டத்திற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்து வருகின்றனநாட்டில் மரவள்ளி உற்பத்தியை பிரபல்யப்படுத்தும் வகையில் மரவள்ளி மா தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
அவர்கள் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.
பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் இந்த பயிர்ச் செய்கையை பிரபல்யப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் கீழ் சுமார் 6,000 ஹெக்டயர் காணியில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளை மரவள்ளி பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தி அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் மரவள்ளியை இந்த புதிய தொழிற்சாலையினூடாக மாவாக மாற்றி அதன் மூலம் சீனி உற்பத்தியை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முதலீட்டின் ஊடாக விவசாய துறையில் பெருமளவு தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். இலங்கைக்கு சீனி உற்பத்திக்காக செலவாகும் பெருமளவு செலவை குறைக்கவும் முடியும்.
சுவீடன் நாட்டின் தொழில்நுட்பத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை இவ்வருடம் ஆரம்பிக்கபடவுள்ளது.

Post a Comment