அமெரிக்காவின் அலபாமா பள்ளி பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பதிலாக ரோபோ பட்டம் பெற்ற நிகழ்ச்சி, பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள லிபுளோர் பள்ளியின் மாணவி சிந்தியா பெட்வே. இவர் பள்ளிப்படிப்பை முடித்திருந்த நிலையில், பெரும்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய அளவில் அவர் கோமா ஸ்டேஜிலேயே உள்ளார்.
இதனிடையே பள்ளி பட்டமளிப்பு விழாவில், மாணவி சிந்தியாவிற்கு பதிலாக, புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ, கலந்துகொண்டது. பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் அங்கி, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்துகொண்டு, ரோபோ பட்டம் பெற்ற போட்டோவை, அங்கிருந்து வரும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
Post a Comment