Ads (728x90)

சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த சக்கப்போடுபோடு ராஜா படு தோல்வியடைந்தது.

அதனால் அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா முக்கிய பாத்திரங்களில் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்தின் பிசினஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே பலதடவை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் 'சர்வர் சுந்தரம்' ரிலீசாகவில்லை. இப்போது 'சர்வர் சுந்தரம்' படத்தை ஜூலை மாதம் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சந்தானம் கதாநாயகனாக நடித்த, பல படங்கள் சொல்லும்பாடியான படமாக அமையவில்லை. நாகேஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படத்தின் தலைப்பை மீண்டும் வைத்து உருவாகியுள்ள இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தை சந்தானம் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

இந்தப் படத்தின் வெற்றியில் தான் சந்தானத்தில் எதிர்காலமே உள்ளது! ஒருவேளை இந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் அவர் மீண்டும் காமெடியனாக நடித்தாலும் ஆச்சர்யமில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget