புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பஸ் கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பதற்கும் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.
இதன் காரணடாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்திருந்தது. அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி குறித்த கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டதை அடுத்து அதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Post a Comment