Ads (728x90)

மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நவீனப்படுத்த 2009-ம் ஆண்டில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் ஏற்படுத்தினார். இந்நிறுவனத்தில் இருந்து நஜீப்பின் வங்கிக் கணக்குக்கு ரூ.3,985 கோடி மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமராஜார். அதன்பின் நஜீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. அண்மையில் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் ரூ.171 கோடிபணம் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் மலேசிய மேம்பாட்டு நிறுவன மோசடி வழக்கில் கோலாலம்பூரில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜீப் ரசாக் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக நஜீப் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று மலேசிய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget