ஐபிஎல் தொடரில் வெளியேற்றும் சுற்றில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை ராஜஸ்தானை வீழ்த்தி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஈடன்கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்திருந்தது.
கடைசியாக பங்கேற்ற 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது அந்த அணி. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை கொல்கத்தா மட்டுமே பெற்றுள்ளது.
Post a Comment