Ads (728x90)

நடிகர் ரஜினிகாந்த்  சினிமாவிலும்,  அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமனத்தை முடித்து, அவர்களை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். அடுத்தப்படியாக மகளிரணியினரை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த சாந்தா என்ற 78 வயது பெண், ரஜினியின் தீவிர ரசிகையாக உள்ளார். ரஜினியின் அரசியல் அறவிப்பு வெளியானதும் அவரும் களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டினார்.

சாந்தாவின் ஒரே ஆசை ரஜினியை சந்தித்து தன் பணிகளை சொல்ல வேண்டும் என்பது தான். இந்த தகவல் ரஜினியின் காதுக்கு எட்ட, தனது போயஸ் இல்லத்திற்கு சாந்தாவை வர வைத்தார் ரஜினி. அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget