ஸ்ரீதேவியின் மறைவு அவரது மகள்களான, ஜான்வியையும், குஷியையும் கடுமையாக பாதித்துள்ளது. ஸ்ரீதேவி மறைந்து மாதங்கள் உருண்டோடினாலும், அந்த இழப்பிலிருந்து, மகள்கள் இருவரும், இன்னும் மீளவில்லை என்பது, சமீபத்திய நிகழ்வுகளில் தெரியவந்துள்ளது.போனி கபூரின் சகோதரர், அனில் கபூரின் மகளும், நடிகையுமான, சோனம் கபூர் திருமணம், சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில், ஜான்வியும், குஷியும், தங்கள் தந்தையுடன் சென்று, பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில், நடனமாடும்படி, ஜான்வியை, சிலர் வற்புறுத்தினர். ஆனால், சிரித்தபடியே, அதை மறுத்து விட்டார், அவர்.
சமீபத்தில், அன்னையர் தினத்தின்போது, ஜான்வியும், குஷியும், தாங்கள் குழந்தையாக இருந்தபோது, தாய் ஸ்ரீதேவியுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, 'மிஸ் யூ அம்மா' என, உருக்கமாக பதிவிட்டிருந்தனர். இதைப் பார்த்த பாலிவுட் பிரபலங்கள்,'தாயின் இழப்பிலிருந்து, இருவரும் இன்னும் மீளவில்லை போலிருக்கிறது' என. பரிதாபப்படுகின்றனர்.
Post a Comment