Ads (728x90)

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டின் தென்மேற்குப் பாகத்தில் அடைமழை எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இயற்கை அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து மண்சரிவு அபாய அறிகுறிகள் தோன்றிய 211 ஸ்தானங்கள் இனங்காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் விஞ்ஞானி கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இவற்றில் 159 ஸ்தானங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் விஞ்ஞானி மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget