இலங்கையின் மலையேறும் வீரரான ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட்டின் உச்சியை இன்னும் சில நாட்களில் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.காலநிலை சீராக இருக்குமானால் இந்த இலக்கை அவரால் அடையமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் எதிர்வரும் 23ஆம் திகதியன்று எவரெஸ்ட்டின் உச்சியை அடைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இமய மலையில் ஏறும் முயற்சியை ஜொஹான் ஆரம்பித்தார்.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறும் முயற்சியை ஜொஹான் மேற்கொண்டார். எனினும் 8400 மீற்றர் உயரம் வரை சென்ற நிலையில் அவர் திரும்பிவர நேரிட்டது. அவருடைய தொழில்நுட்ப உதவி உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்கான காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் அவருடன் 2016 இல் எவரெஸ்ட்டில் ஏறிய ஜயந்தி கரு உடும்பலா (Jayanthi Kuru-Utumpala) மே 21 ஆம் திகதி தமது இலக்கை அடைந்து எவரெஸ்ட் மலையுச்சியை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment