Ads (728x90)

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று ஈகைச் சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்க இறுதிப் போரில் தனது உறவை இழந்த சகோதரி ஒருவரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.

உறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்தது.

மதத் தலைவர்களின் வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன. ஈகைச்சுடரை சுற்றி பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

இறுதிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொது மக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் நினைவேந்தலுக்கு வந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget