ஆடுகளம் டாப்சி, டில்லியைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது ஐதராபாத்தில் குடியிருந்த அவர், சமீபகாலமாக இந்தி சினிமாவில் பிசியாகி விட்டதால் மும்பையில் குடியேறியிருக்கிறார். அவரது தங்கையான ஷாகன் என்பவரும் டாப்சியுடன் தங்கியிருந்தபடி மும்பையில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்நிலையில், தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் டாப்சி. அதில், மும்பையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அது இப்போது நனவாகியிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Post a Comment