Ads (728x90)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி ஆயிரக்கணக்கானோர்  கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தனியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கு அமெரிக்கா முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்ததால் குழந்தைகளைப் பெற்றோரிடம் சேர்க்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு

உத்தரவிட்டார். ஆனால் அவர்களை பெற்றோருடன் சேர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது இதனிடையே, இப்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை குடும்பத்துடன் கைது செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கூறி 100 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ‘எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு பாதுகாப்பு சட்ட மசோதா’ நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எனினும், நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்தது.

இந்நிலையில், எல்லைப் பாதுகாப்பு கொள்கை மற்றும் அகதிகளுக்கு எதிராக மனிதாபிமான வகையில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் செயல்படுவதாகக் கூறி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் எம்.பி. (மக்கள் பிரதிநிதிகள் சபை எம்.பி. - கீழவை) பிரமிளா ஜெயபால் (52) நேற்று முன்தினம் கேபிட்டால் ஹில் பகுதியில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது தலைமை

யின் கீழ் 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று ட்ரம்ப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.இதையடுத்து பிரமிளா ஜெயபால் உட்பட போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ட்ரம்ப் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தலைநகர் வாஷிங்டன் உட்பட நாட்டின் சுமார் 600 நகரங்களில் நேற்று குடும்பத்தினரை ஒன்றிணையுங்கள் என்ற பெயரில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, ட்ரம்பின் உத்தரவால் தனியாக பிரிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.அதிபர் ட்ரம்ப்

Post a Comment

Recent News

Recent Posts Widget