
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் தேசிய வங்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், நிறுவனங்கள் என தங்களது பணத்தினை சேமிப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வங்கியில் கடந்த 2016ம் ஆண்டு கணக்கின்படி 44 சதவீத அளவிற்கு இந்தியாவின் சேமிப்பு குறைந்த நிலையில் தரவரிசையில் 88வது இடத்திற்கு சென்றது. ஆனால், சமீபத்திய தகவலின்படி, 2017ம் ஆண்டில் 50 சதவீதம் உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியா 73வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என தெரிய வந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் இந்தியா 75வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய வருடத்தில் 61வது இடத்தில் இருந்தது. கடந்த 1996ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை டாப் 50ல் இந்தியா இருந்தது. 2004ம் ஆண்டில் தர வரிசையில் உயர்ந்த நிலையில் 37வது இடத்தில் இருந்தது.
இந்த வரிசையில் பாகிஸ்தான் 72வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, 2வது இடத்தில் தொடர்ந்து உள்ளது. முதல் 10 இடத்தில் மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங், பஹாமஸ், ஜெர்மனி, கிர்ன்சே, லக்சம்பர்க் மற்றும் கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளன.
Post a Comment