ஜனாதிபதி முறையை நீக்குகின்ற யோசனை உள்ளடங்கிய 20ஆவது திருத்த சட்டமூலம் ஐக்கிய தேசிய கட்சியை வலிமைப்படுத்தும் நோக்கிலேயே ஜேவிபியினால் கொண்டுவரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ருவன்வெல்லயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜே.வி.பி ஏன் இதனைக் கொண்டுவந்தது என்று தெரியவில்லை. அது வேரொரு தரப்பினருக்காக கொண்டுவந்ததாகவே தோன்றுகின்றது.
அது ஐக்கிய தேசிய கட்சிக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே உள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியே கொண்டு வந்திருக்கலாம் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
Post a Comment