ஆசிய அபிவிருத்தி வங்கி 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறையினை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளது.பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்காக இந்த நிதி உதவி பயன்படுத்தவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஸ்ரீ விடோவதியும் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர் எச் எஸ் சமரதுங்கவும் கைச்சாத்திட்டனர்.
Post a Comment