Ads (728x90)

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும், இவருக்கும் தான் போட்டி நிலவியது .

பெரிய நடிகர்கள் அனுஷ்காவுடன் ஜோடி சேர்வதை விரும்பினார்கள். 2005–ல் சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி 13 வருடங்கள் கொடி கட்டி பறந்தார்.

தமிழில் அனுஷ்காவுக்கு முதல் படம் ‘ரெண்டு’. அருந்ததி படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வேட்டைக்காரன், சிங்கம், வானம், சகுனி, தாண்டவம், இரண்டாம் உலகம் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். பாகுபலி மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ருத்ரமாதேவி, ஓம் நமோ வெங்கடேசாய படங்களிலும் பேசப்பட்டார்.

கடைசியாக ஜனவரி மாதம் பாகுமதி படம் வந்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. தொடர்ந்து நடிக்க அனுஷ்காவுக்கு விருப்பம் உள்ளது. ஆனால் டைரக்டர்கள் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. பிரபலமில்லாத கதாநாயகர்கள் படங்களில் நடிக்க தயாராக இருந்தும் யாரும் அணுகவில்லை.

மாதவனுடன் புதிய படமொன்றில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் வந்த தகவல்களும் உறுதியாகவில்லை. சினிமாவை விட்டு விலகும் முடிவில் அனுஷ்கா இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் பேசுகிறார்கள். அனுஷ்காவுக்கு இப்போது 36 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரம் காட்டுகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget