Ads (728x90)

ஹன்சிகாவின் 50–வது படமாக மஹா தயாராகிறது அது குறித்து  ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். மஹா படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும். படத்தின் கதை பிடித்து இருந்தால் உடனே நடிக்க சம்மதிக்கிறேன். வணிக படங்களில் அதிகம் நடித்து இருக்கிறேன். மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கிறது. 

தமிழ் பெண்ணாகவே நான் மாறிவிட்டேன். மான் கராத்தே படத்தில் நடிப்பதற்காக 3 கதைகளை நிராகரித்தேன். எனது படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள். எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது இல்லை. அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று தான் யோசிப்பேன்.

மலையாளத்தில் வில்லன் படத்தில் நடித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்து எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். மும்பையில் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கண்காட்சியாக வைத்து நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளேன்.’’இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget