Ads (728x90)

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மஹேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget