Ads (728x90)

குத்துச்சண்டை வீரர் சவுல் "கெனெலோ" அல்வாரெஸ் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரராக உள்ளார். இவரை வைத்து விளையாட்டு துறை வரலாற்றில்  பணக்கார  தடகள ஒப்பந்தம் நடைபெற்று உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 11 போட்டிகளுக்கு  விளையாட்டு ஸ்ட்ரீமிங் சேவையை  வழங்க DAZN உடன் ஒப்பந்தத்தில் பங்கு கொள்ள  கெனெலோ அல்வாரெஸ் விளையாட்டு வரலாற்றில் மிகப் பெரிய ஊதியம் ஒன்றை பெற்று உள்ளார்.

அவரது விளம்பரதாரர் கோல்டன் பாய் விளம்பரங்களின் படி சுமார் $ 365 மில்லியன் டாலர்  (சுமார் ரூ 2700 கோடி)  சராசரியாக   ஒரு சண்டைக்கு $ 33 மில்லியன்  ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு நிமிடத்திற்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் பெறுகிறார். சராசரியாக அல்வரெஸ் ஒப்பந்தம் 13 ஆண்டுகளுக்கு மேலாக  விளையாட்டு வரலாற்றில்  இது பணக்கார தடகள ஒப்பந்தமாகும்.

  பேஸ்பால் வீரர்  ஜியான்கர்லோ  ஸ்டாண்டோன்  2014ஆண்டு மியாமி மாலினுடன்  $ 365 மில்லியன் டாலருக்கு ஓப்பந்ததம் செய்து இருந்தார்.

கால்பந்து நட்சத்திரங்கள் நெய்மர் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தங்களைக் செய்துள்ளனர். நெய்மர் ஒரு ஐந்து ஆண்டு ஒப்பந்தம் மற்றும்  மெஸ்ஸின் 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து உள்ளனர். பயணத்தை மேற்கொண்டார்.

உலகின் உயர்ந்த ஊதியம் பெறும் விளையாட்டு வீரர் என்ற பெயரில்  அல்வாரெஸ்  உள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget