பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் உருவானபோது நடந்த போரில், நாட்டை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அனைவரையும் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.கடந்த மார்ச் மாதம் 30–ந்தேதி முதல் பாலஸ்தீனியர்கள் ‘கிரேட் மார்ச் ஆப் ரிட்டர்ன்’ என்ற பெயரில், வெள்ளிக்கிழமைதோறும் காசாமுனை பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினமும் அங்கு பாலஸ்தீனியர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் டயர்களை எரித்தார்கள். பாலஸ்தீனிய கொடியை அசைத்தார்கள். இஸ்ரேல் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
Post a Comment