Ads (728x90)

கோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்து நின்ற முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு உந்துருளியில் வருகை தந்த ஐந்து பேரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (21) இரவு 7.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதுடன் ஸ்தலத்திற்கு கோப்பாய் மற்றும் சுன்னாம் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget