Ads (728x90)

அரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்றுகூடும் தினம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எவ்வாறாயினும் 19 ஆவது சீர் திருத்தத்தின் பிரகாரம் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரையில் தற்போதைய உறுப்பினர்கள் பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 27 ஆம் திகதி வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதுடன் அதற்கு முன்னர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒன்று கூட உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 27 ஆம் திகதி மொங்கோலிய நோக்கி பயணிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget