Ads (728x90)

கதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் போலீஸ், நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள பல படங்கள் அவருக்கு அமைந்தன.

சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார். இதில் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாக பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் சைரா நரசிம்மரெட்டி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.

சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல் ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. சூப்பர் டீலக்ஸ் படத்தில் சில காட்சிகளில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது திருநங்கை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, டைரக்டர் மிஷ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் பட வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget