இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வலுவான அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக லண்டன் பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் டேவிட் ஸ்ரீமர் தெரிவித்துள்ளார்.தமது அமைப்பு இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் முதலீட்டிற்கும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீமர் குறிப்பிட்டார்.
லண்டன் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் ஆரம்ப விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக, நிதி உறவுகளை புதிய திசையில் செலுத்தும் நோக்கத்துடன் லண்டன் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு நேற்றுமுன்தினம் அமோக வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக மக்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்தார்.
Post a Comment