Ads (728x90)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மறுசீரமைக்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி உடவளவ ரேவத்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆரம்ப கல்வி வள நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், இதுகுறித்து ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கொடுப்பனவில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் உறுதியளித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மூலம் புதிய பாடசாலை அனுமதி கோருவது தொடர்பிலும் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை இடம்பெறும் நேரத்தில் தனியார் மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget