இந்த ஆண்டு (2018) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் (வயது 77), பால் ரோமர் (62) ஆகிய இரு பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவர்களில் வில்லியம் நார்தாஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பால் ரோமர் முன்பு உலக வங்கியில் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்தவர். தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வர்த்தக கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், பருவநிலை மாற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்கள் இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது.
எனவே பரிசுத்தொகையான ரூ.7½ கோடியை வில்லியம் நார்தாசும், பால் ரோமரும் பகிர்ந்து கொள்வார்கள்.
Post a Comment